டொனால்டு டிரம்ப் - சீன அதிபர் பேச்சுவார்த்தை

தொலைபேசி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.;

Update:2025-06-03 08:20 IST

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார். இதற்கு பதிலடி கொடுத்த சீனா, அமெரிக்க பொருட்கள் மீது 125 சதவீத வரியை உயர்த்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டது.

அதேவேளை, வர்த்தகப்போரை முடிவுக்குக் கொணடுவர இரு நாடுகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனை தொடர்ந்து அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா குறைத்தது. அதன்படி, சீன பொருட்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. அதேபோல், அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 125 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக சீனா குறைத்தது.

இந்நிலையில், வர்த்தகப்போர் தற்போது மெல்ல தணிந்துள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த வாரம் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் வர்த்தக மோதலை கைவிட்டு இருநாட்டு உறவை வலுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்