சீனாவுக்கு சலுகை காட்டும் டிரம்ப்? வரி விதிப்பு விவகாரத்தில் புதிய உத்தரவு

சீனா பொருட்களுக்கான இறக்குமதி வரியை 145 சதவீதம் வரை உயர்த்திய டிரம்ப் அதனை பின்னர் நிறுத்திவைத்தார்.;

Update:2025-08-12 09:28 IST

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20-ந்தேதி பொறுப்பேற்று கொண்ட டொனால்டு டிரம்ப், பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, நாடுகளுக்கு வரி விதிப்பதும் அடங்கும்.வரி வருவாயை கொண்டு நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது போல் இருந்தபோதும், அதனை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி டிரம்ப் உத்தரவிட்டார். பிரேசில் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவிலும், சமீபத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

இதேபோன்று, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு மற்றும் கூடுதல் அபராதம் ஆகியவற்றை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார். சீனாவுக்கு 30 சதவீத வரி விதிப்பு அமலில் உள்ளது. முன்னதாக பரஸ்பர வரி விதிப்புக்கு சீனா பதிலடி கொடுத்ததால் அந்த நாட்டின் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். பின்னர் இரு நாடுகளும் மேற்கொண்ட ஆலோசனைக்கு பிறகு அதனை நிறுத்தி வைத்தார். வர்த்த ஒப்பந்தம் ஏற்படுவதற்காக இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்து டிரம்ப் அறிவித்தார்.

இதற்கான கெடு நேற்று நள்ளிரவுடன் முடிந்த நிலையில், தற்போது மேலும் 90 நாட்களுக்கு அவகாசத்தை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இந்தியாவுக்கு கெடு முடியும் முன்பே வரியை விதித்த டிரம்ப், சீனாவுக்கு மேலும் 90 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து இருப்பது சீனாவுக்கு சலுகை காட்டும் வகையில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்