எலான் மஸ்க் கட்சி குழப்பத்தை அதிகரிக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது. 3- வது கட்சிகள் ஒரு போதும் வேலை செய்யவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.;

Update:2025-07-07 22:00 IST

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தொழில் அதிபர் எலான் மஸ்க். இவருக்கும் டிரம்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்-கொருவர் சரமாரி–யாக குற்றச்–சாட்டுகளை கூறி வருகின்றனர்.இந்த நிலையில் அவர் அதிபர் டிரம்புக்கு எதிராக தி அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய கட்சி தொடங்கி உள்ளதாக அறிவித்தார். இதனை டிரம்ப் கடுமையாக விமர்ச–னம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அமெரிக்காவில் இரு கட்சி முறை தான் இருந்து வருகிறது. 3-வது கட்சியை தொடங்குவது அபத்தமானது. இது குழப்பத்தை அதிகரிக்கும். தேர்தலில் எங்கள் குடியரசு கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஜனநாயக கட்சியினர் வெற்றி பெற தவற விட்டனர். அமெரிக்காவில் எப்போதும் இரு கட்சி முறையாகவே இருந்து வருகிறது. 3- வது கட்சிகள் ஒரு போதும் வேலை செய்யவில்லை. கட்சி தொடங்குவது எலான் மஸ்கிற்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் அது அபத்தமானது என நான் நினைக்கிறேன். 3- வது அரசியல் கட்சி அமெரிக்காவில் ஒரு போதும் வெற்றி பெற்றது கிடையாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்