ஆப்பிரிக்காவில் கனமழை, வெள்ளம்; 100 பேர் பலி

கனமழை, வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.;

Update:2026-01-16 20:22 IST

ஜோகன்ஸ்பெர்க்,

ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே, மொசாம்பிக்யூ, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கனமழை காரணமாக இந்நாடுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கனமழை, வெள்ளத்தில் சிக்கி ஆப்பிரிக்காவில் உள்ள இந்த 3 நாடுகளிலும் மொத்தம் 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, தென் ஆப்பிரிக்காவில் 19 பேரும், ஜிம்பாப்வேயில் 70 பேரும், மொசாம்பிக்யூவில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்து தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை, கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்