இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல்
பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய தூதரக அறிவுறுத்தி உள்ளது.;
டெல் அவிவ்,
இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போது இங்குள்ள அனைத்து இந்திய நாட்டினரும் விழிப்புடன் இருக்கவும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ஹோம் ப்ரண்ட் கமாண்ட் (https://oref.org.il/eng) வழங்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
2. இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்கவும் இந்திய நாட்டினருக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
3. ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், இந்திய நாட்டினர் இந்திய தூதரகத்தின் 24x7 உதவி எண்ணை இங்கே தொடர்பு கொள்ளலாம்:
தொலைபேசி: +972-54-7520711; +972-54-3278392
மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.