படகு கடலில் மூழ்கி விபத்து; 6 பேர் பலி... மாயமான 30 பேரை தேடும் பணி தீவிரம்

மோசமான வானிலை காரணமாக அலைகளில் சிக்கி படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.;

Update:2025-07-04 18:04 IST

 ஜகார்தா,

இந்தோனேசியாவின் கெட்டபாங் நகரில் உள்ள துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை இரவு பாலி தீவு நோக்கி சுற்றுலா படகு சென்றுள்ளது. அந்த படகில் 65 பேர் பயணித்தனர்.

பாலி தீவின் அருகே சென்றபோது மோசமான வானிலை காரணமாக அலைகளில் சிக்கி படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் கடலில் விழுந்து உயிருக்கு போராடிய 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். அதேவேளை, படகில் பயணித்த மேலும் 30 பேர் கடலில் மூழ்கி மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்