உக்ரைனுக்கு ரூ.1,750 கோடி ராணுவ உதவி வழங்கும் நெதர்லாந்து

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன.;

Update:2025-06-25 00:55 IST

தி ஹேக்,

உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார உதவி வழங்குகின்றன. இதனால் உக்ரைன் இன்னும் இந்த போரில் தாக்குப்பிடித்து நிற்கிறது.

அந்தவகையில் உக்ரைனுக்கு சுமார் ரூ.1,750 கோடி ராணுவ உதவி வழங்க நெதர்லாந்து முடிவு செய்துள்ளது. இதில் 100 டிரோன் கண்டறியும் ரேடார்கள், வான்பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை அடங்கும்.

முன்னதாக 6 லட்சம் டிரோன்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை நெதர்லாந்துடன் உக்ரைன் ராணுவம் செய்திருந்தது. ஒப்பந்தத்தின்படி டிரோன்கள், ரேடார்கள் போன்றவை இந்த ஆண்டு இறுதிக்குள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என நெதர்லாந்து ராணுவ மந்திரி ரூபன் பிரெக்கல்மன்ஸ் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்