அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தீயணைப்பு வீரர்கள் 2 பேர் பலி

வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.;

Update:2025-06-30 08:58 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் இடாஹோ மாகாணம் கொயூர் டி அலீன் நகரில் உள்ள வனப்பகுதியில் தீப்பற்றி எரிவதாக தீயணைப்பு துறையினருக்கு நேற்று இரவு 11 மணியளவில் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, தீயணைப்பு வீரர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.  

Tags:    

மேலும் செய்திகள்