அமெரிக்கா: நடுவானில் தீப்பிடித்த விமானம்; 2 பேர் பலி

விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வந்ததையடுத்து விமானி அவசரமாக தரையிறக்க முயன்றார்.;

Update:2025-09-07 10:31 IST

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் விமான நிலையத்தில் இருந்து பீச் பி.இ-35 என்ற சிறிய ரக விமானம் புறப்பட்டது. நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் என்ஜினில் இருந்து புகை வருவதை விமானி கண்டார்.

இதனையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்த விமானம் தீப்பிடித்து அங்குள்ள பூங்காவில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேரும் உடல் கருகி பலியாகினர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்