இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தது ஏன்? அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பதில்
ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா மீது டிரம்ப் 2வது கட்ட வரி விதிப்பை மேற்கொண்டார் என்று ஜேடி வான்ஸ் கூறியுள்ளார்.;
வாஷிங்டன்,
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
ரஷியா–உக்ரைன் இடையிலான மோதல் விரைவில் முடிவடைவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கடந்த சில வாரங்களில் இரு தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளன. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா மீது டிரம்ப் 2வது கட்ட வரி விதிப்பை மேற்கொண்டார்.
தீவிர பொருளாதார நெருக்கடி தரும் வழிமுறைகளை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். இது ரஷியாவின் எண்ணெய் வர்த்தக வருவாயை குறைப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை ஆகும். கொலை செய்வதை நிறுத்தாவிட்டால் ரஷியா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். தொடர்ந்து ரஷியா தனிமைப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.