தி.மு.க.வினர் செல்போன் ஒட்டு கேட்பு: தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார்

தி.மு.க.வினர் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.

Update: 2024-04-16 12:31 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க.வினரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுவதாக என இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள புகாரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன.

இந்த சட்டவிரோத செயலில் மத்திய அரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என நாங்கள் சந்தேகிக்கிறோம். எனவே, இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட

வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்