நாடாளுமன்ற தேர்தல்: வேறு கட்சிகளில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரம்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் பிற கட்சிகளில் இருந்து தலைவர்கள், தொண்டர்கள் என 1 லட்சம் பேரை சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.

Update: 2024-03-28 08:36 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. நாட்டில் மிக பெரிய அரசியல் கட்சியாக தடம் பதித்துள்ள பா.ஜ.க. பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து கட்சியை விரிவுப்படுத்தி வருகிறது.

இதற்காக அக்கட்சி கமிட்டிகளை அமைத்து, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. பொது தேர்தலுக்கு முன் பிற கட்சிகளில் இருந்து தலைவர்கள், தொண்டர்கள் என 1 லட்சம் பேரை கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அது தேசிய அளவில் என்றில்லாமல், மாவட்ட அளவிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

இதன்படி, சமீபத்தில் முன்னாள் மராட்டிய முதல்-மந்திரி அசாக் சவான், முன்னாள் ஆந்திர பிரதேச முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டி ஆகியோர் அக்கட்சியில் இணைந்த பிரபலங்களாக அறியப்படுகின்றனர்.

இதேபோன்று காங்கிரசை சேர்ந்த ரவ்நீத் சிங் பிட்டு, அகில இந்திய திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த அர்ஜுன் சிங், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை சேர்ந்த வரபிரசாத ராவ் மற்றும் ஆம் ஆத்மியை சேர்ந்த சுஷில் குமார் ரிங்கு உள்ளிட்டோர் அக்கட்சியில் இணைந்துள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், வேறு கட்சிகளில் இருந்து இதுவரை பா.ஜ.க.வில் 80 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 1 லட்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்