இளைஞர்களின் கனவுகளை பிரதமர் மோடி அழிக்கிறார் - ராகுல்காந்தி

இளைஞர்களின் கனவுகளை பிரதமர் மோடி அழிக்கிறார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-24 17:36 GMT

டெல்லி,

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 49 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.

இதனிடையே, 6ம் கட்ட தேர்தல் நாளையும் (25ம் தேதி), 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இறுதிகட்ட தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி இன்று இளைஞர்களுடன் லாரியில் பயணித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். லாரி பயணத்தின்போது ராகுல்காந்தி இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், அக்னிபாத் திட்டத்தால் நாட்டின் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற இளைஞர்களின் கனவுகளைபிரதமர் மோடி அழிக்கிறார். இந்தியா கூட்டணி அரசு அமைந்தவுடன் வீரமிக்க இளைஞர்களுக்கு நீதி கிடைக்கும். இளைஞர்களின் கனவுகள் நொறுங்க நாங்கள் விடமாட்டோம்' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்