2027 ஒருநாள் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவில் 44 போட்டிகள் - வெளியான தகவல்

2027 உலகக்கோப்பை தொடரில் தென்ஆப்பிரிக்காவில் 44 போட்டிகளும், நமீபியா, ஜிம்பாப்வேயில் 10 போட்டிகளும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-08-24 08:50 IST

கோப்புப்படம்

கேப்டவுன்,

2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவில்தான் நடைபெறும். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் மொத்த போட்டிகளில் 44 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும். 8 இடங்களில் போட்டி நடத்தப்படும். 10 போட்டிகளில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடத்தப்படும் என உலகக்கோப்பை தொடருக்கான தங்களது திட்டங்களை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விவரித்துள்ளது.

2003ம் ஆண்டு ஆப்பிரிக்கால் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதன்பின் 24 வருடங்கள் கழித்து தற்போது அங்கு நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்