அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20: வங்காளதேசம் வெற்றி
4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.;
சட்டோகிராம்,
வங்காளதேசம்-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20தொடரில் 2-வது ஆட்டம் சட்டோகிராமில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட் சாய்த்தார். இதனையடுத்து ஆடிய வங்காளதேச அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 57 ரன்கள் எடுத்த கேப்டன் லிட்டான் தாஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது