2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்

காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் அணிக்கு திரும்பி உள்ளார்.;

Update:2025-07-03 10:16 IST

செயின்ட் ஜார்ஜ்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று நாளுக்குள் முடிந்த தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. விரலில் ஏற்பட்ட காயத்தால் முதலாவது டெஸ்டில் ஆடாத ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் அணிக்கு திரும்புவதால், ஜோஷ் இங்லிசுக்கு இடம் இருக்காது என்று தெரிகிறது. மற்றபடி அதே உத்வேகத்துடன் தாக்குதலுக்கு தயாராக இருக்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமார் ஜோசப், ஜெய்டன் சீலஸ் ஆகியோரது பந்து வீச்சு நன்றாக இருந்தது. ஆனால் பேட்டிங் மெச்சும்படி இல்லை. எனவே கணிசமான ரன்கள் எடுத்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்க முடியும். முன்னாள் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட்டுக்கு இது 100-வது டெஸ்டாகும். இந்த மைல்கல்லை எட்டும் 10-வது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆவார். 



Tags:    

மேலும் செய்திகள்