தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய டி20, ஒருநாள் தொடர்: ஆஸி.அதிரடி வீரர் விலகல்

ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டி20 போட்டியின்போது அவர் ஹெல்மட்டில் பந்து தாக்கியது.;

Update:2025-08-14 23:46 IST

image courtesy:ICC

டார்வின்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. டி20 போட்டிகள் நிறைவடைந்தவுடன் ஒருநாள் தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பம் ஆகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய டி20, ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரரான மிட்செல் ஓவன் விலகியுள்ளார். 2-வது போட்டியில் பேட்டிங் செய்கையில் பந்து அவரது ஹெல்மட் மீது பலமாக தாக்கியது. இதனால் ஏற்பட்ட மூளையதிர்ச்சி காரணமாக அவர் தொடரிலிருந்து விலகியுள்ளார். பந்து பட்டவுடன் களத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர் நலமாக இருந்தாலும், சிறிது நேரம் கழித்து அவருக்கு அசவுகரியங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்