4-வது டி20; இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்

தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.;

Update:2025-11-06 05:57 IST

கோல்டுகோஸ்ட்,

ஆஸ்திரேலியாவில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கே தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதால் இரு அணியினரும் வரிந்து கட்டி நிற்பார்கள்.பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்