4வது டெஸ்ட்: மான்செஸ்டர் சென்றடைந்த இந்திய அணி
4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி தொடங்குகிறது.;
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் 23ம் தேதி மான்செஸ்டர் நகரில் தொடங்குகிறது.
இந்த நிலையில், 4வது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணி வீரர்கள் இன்று மான்செஸ்டர் சென்றடைந்தனர் .இது தொடர்பான புகைப்படத்தை பிசிசிஐ தனது எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளது. மேலும் இன்று முதல் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.