4-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப்பின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த சிராஜ்

இந்தியா-இங்கிலாந்து 4-வது டெஸ்ட் நாளை தொடங்க உள்ளது.;

Update:2025-07-22 10:20 IST

மான்செஸ்டர்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் சில வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. அதில் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அவரால் 4-வது போட்டிக்கு முன்னதாக முழுவதும் குணமடைய முடியுமா என்பது குறித்து எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் ஆகாஷ் தீப்பின் காயம் குறித்து சக வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் சில தகவல்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிராஜ் பேசியது பின்வருமாறு:- "ஆகாஷ் தீப்புக்கு இடுப்பு பகுதியில் பிரச்சினை உள்ளது. அவரது உடல்தகுதி குறித்து மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள். நேற்று அவர் பயிற்சியில் பந்து வீசினார். இருப்பினும் அவரது காயத்தன்மை குறித்து இன்னும் எந்த தகவலும் வரவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்