5-வது டெஸ்ட்: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த வாசிம் ஜாபர்
இந்தியா-இங்கிலாந்து 5-வது டெஸ்ட் இன்று தொடங்க உள்ளது.;
image courtesy:ICC
மும்பை,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த டெஸ்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகி விட்டார். இதே போல் 'நம்பர் ஒன்' வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கும்படி கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான தான் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அறிவித்துள்ளார். அவரது அணியில் ஷர்துக் தாக்குருக்கு பதிலாக குல்தீப் யாதவையும், அன்ஷுல் கம்போஜுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கையும், பும்ராவுக்கு பதிலாக ஆகாஷ் தீப்பையும் தேர்வு செய்துள்ளார்.
வாசிம் ஜாபர் தேர்வு செய்த இந்திய பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
1. யஷஸ்வி ஜெய்ஸ்வால்
2. கே.எல். ராகுல்
3. சாய் சுதர்சன்
4. சுப்மன் கில் (கேப்டன்)
5. ஜூரல்
6. ஜடேஜா
7. வாஷிங்டன்
8. குல்தீப்
9. சிராஜ்
10. அர்ஷ்தீப்
11. ஆகாஷ்தீப்