இலங்கை - பாகிஸ்தான் 2வது டி20 மழையால் ரத்து

மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.;

Update:2026-01-09 21:53 IST

 கொழும்பு,

டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் வரும் பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெற இருக்கின்றன. இதற்கிடையில், பாகிஸ்தான் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ளது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருந்தது. போட்டி நடைபெறும் இடத்தில் மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

மழை நின்ற பின் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை தொடர்ந்தது. இதனால் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்