ஆசிய கோப்பை: முதற்கட்ட அணியை அறிவித்த ஆப்கானிஸ்தான்

ஆசிய கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.;

Update:2025-08-06 10:00 IST

Image Courtesy: @ACBofficials

மும்பை,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடருக்கான முதற்கட்ட அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. ரஷித் கான் தலைமையிலான அந்த அணியில் 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:- ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், வபியுல்லா தாரகில், இப்ராஹிம் சத்ரான், தர்வீஷ் ரசூலி, முகமது இஷாக், ரஷித் கான் (கேப்டன்), முகமது நபி, நங்யல் கரிமுத்தீன் கரோட்டி, ஷரபுத்தீன் கரோட்டி, உமர்சாய், குல்பாடின் நைப், முஜீப் சத்ரான், ஏ.எம்.கசன்பர், நூர் அஹ்மத், பசல் ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக், ஃபரித் மாலிக், சலீம் சபி, அப்துல்லா அஹ்மத்சாய், பஷீர் அஹ்மத்.

Tags:    

மேலும் செய்திகள்