ஆசிய கோப்பை கிரிக்கெட்: ஓமன் அணி அறிவிப்பு

ஓமன் அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.;

Update:2025-08-26 14:25 IST

மஸ்கட்,

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஓமன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜதிந்தர் சிங் தலைமையிலான அந்த அணியில் 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பைக்கான ஓமன் அணி விவரம்:

ஜதிந்தர் சிங் (கேப்டன்), ஹம்மாத் மிர்சா, விநாயக் சுக்லா, சுஃப்யான் யூசுப், ஆஷிஷ் ஒடெடெரா, ஆமிர் கலீம், முகமது நதீம், சுஃப்யான் மெஹ்மூத்,ஆர்யன் பிஷ்ட், கரண் சோனாவலே, ஜிக்ரியா இஸ்லாம், ஹஸ்னைன் அலி ஷா, பைசல் ஷா, முகமது இம்ரான், நதீம் கான், ஷகீல் அகமது, சமய் ஸ்ரீவஸ்தவா.

ஆசிய கோப்பையில் ஓமன் அணி பங்கேற்பது முதல் முறையாகும். ஓமன் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் செப்.15-ம் தேதி மோதுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்