தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர் - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-30 09:16 IST

Image Courtesy: @ICC

கான்பெர்ரா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய டி20 அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்போட், டிம் டேவிட், பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேட் குன்னமென், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி விவரம்: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஸ்சாக்னே, லான்ஸ் மோரிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா.

Tags:    

மேலும் செய்திகள்