இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 - நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.;
Image Courtesy : @BCCI
மும்பை,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்நிலையில், போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.