டி20 தொடர்...’எங்களுடைய இலக்கு அதுதான்’ - சாண்ட்னர் பேட்டி

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.;

Update:2026-01-21 11:15 IST

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணி, நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சொந்த மண்ணில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் இத்தொடரை வெல்ல இரு அணிகளும் தயாராகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து டி20 அணி கேப்டன் சாண்ட்னர், டி20 தொடரிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று கூறி இருக்கிறார். அவர் பேசுகையில், “நாங்கள் இந்தியாவில் விளையாடுவதை விரும்புகிறோம். சமீப காலங்களில் இந்தியாவுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் நாங்கள் வெவ்வேறு பார்மட்டில் வெற்றிகளைப் பெற்றுள்ளோம்.

அதேபோல நாங்கள் இத்தொடரையும் எதிர்நோக்குகிறோம். இத்தொடரை வெல்வது எங்களுடைய இலக்காகும். அதே சமயம் டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதும் முக்கிய இலக்காகும். உலகக்கோப்பையில் நாங்கள் எதிர்கொள்ளப் போகும் சூழ்நிலைகளில் இந்தியா போன்ற சிறந்த அணியுடன் இப்போதே விளையாடுவது நல்லது” என்றார்.

இந்திய அணி:- சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா, அக்‌சர் பட்டேல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா , ஷிவம் துபே, அர்ஷ்தீப்சிங் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.

நியூசிலாந்து அணி:- மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்) , பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல் , மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டபி, லாக்கி பெர்குசன் , மேட் ஹென்றி , ஆடம் மில்னே , டேரில் மிட்செல் , ஜிம்மி நீஷம் , கிளென் பிலிப்ஸ் , ரச்சின் ரவீந்திரா , டிம் சீபர்ட் (விக்கெட் கீப்பர்), இஷ் சோதி.

Tags:    

மேலும் செய்திகள்