புச்சிபாபு கிரிக்கெட்: தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன்- மராட்டியம் ஆட்டம் ‘டிரா’

மராட்டியம் அணி முதல் இன்னிங்சில் 228 ரன்களில் ஆல் அவுட் ஆனது.;

Update:2025-08-25 15:44 IST

சென்னை,

புச்சிபாபு கோப்பைக்கான அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

கோஜன் கல்லூரி மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) முதல் இன்னிங்சில் தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 9 விக்கெட்டுக்கு 384 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய மராட்டிய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது மற்றும் கடைசி நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த அந்த அணி 228 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 156 ரன்கள் முன்னிலையுடன் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக தலைவர் லெவன் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 4 ரன் எடுத்திருந்த போது ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- அரியானா (சி பிரிவு) அணிகள் சந்தித்தன. முதல் நாளில் தமிழக லெவன் அணி 90 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் குவித்தது. 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. 3-வது நாளான நேற்று தனது முதல் இன்னிங்சை ஆடிய அரியானா 207 ரன்னில் அடங்கியது. சுழற்பந்து வீச்சாளர் சந்திரசேகர் 5 விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் ஆட்டம் டிராவில் முடித்துக்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்