கரீபியன் பிரீமியர் லீக்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்

பொல்லார்டுக்கு பதிலாக கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-14 23:30 IST

image courtesy:twitter/@TKRiders

டிரினிடாட்,

6 அணிகள் இடையிலான 13-வது கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நாளை (இந்திய நேரப்படி) தொடங்க உள்ளது. இதன் முதல் லீக் ஆட்டத்தில் செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் - ஆன்டிகுவா & பார்புடா பால்கன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் முன்னாள் சாம்பியனான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய கேப்டனான பொல்லார்டு சாதாரண வீரராக விளையாட முடிவெடுத்த நிலையில் கேப்டன் பொறுப்பு பூரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளரின் கீழ் கோப்பையை வெல்வதை அந்த அணி இலக்காக கொண்டு களமிறங்க உள்ளது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் வருகிற 17-ம் தேதி செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணியுடன் மோத உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்