சாம்பியன்ஸ் டிராபி; அரையிறுதி ஆட்டங்களுக்கான நடுவர்கள் விவரங்களை வெளியிட்ட ஐ.சி.சி
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.;
Image Courtesy: @ICC
துபாய்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் நாளை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து லாகூரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், இந்த அரையிறுதி ஆட்டங்களில் நடுவர்களாக செயல்படுவர்களின் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
முதலாவது அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா (துபாய்)
கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி (நியூசிலாந்து), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து)
மூன்றாவது நடுவர்: மைக்கேல் கோப் (இங்கிலாந்து)
4வது நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தென் ஆப்பிரிக்கா)
போட்டி நடுவர் (ரெப்ரீ): ஆண்டி பைக்ராப்ட் (ஜிம்பாப்வே)
நடுவர் பயிற்சியாளர்: ஸ்டூவர்ட் கம்மிங்ஸ் (இங்கிலாந்து)
இரண்டாவது அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து (லாகூர்)
கள நடுவர்கள்: குமார் தர்மசேனா (இலங்கை), பால் ரீபெல் (ஆஸ்திரேலியா)
மூன்றாவது நடுவர்: ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்)
4வது நடுவர்: அஹ்சன் ராசா (பாகிஸ்தான்)
போட்டி நடுவர் (ரெப்ரீ): ரஞ்சன் மதுகல்லே (இலங்கை)
நடுவர் பயிற்சியாளர்: கார்ல் ஹர்ட்டர் (தென் ஆப்பிரிக்கா)