சாம்பியன்ஸ் டிராபி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

Update:2025-03-04 14:06 IST
Live Updates - Page 3
2025-03-04 12:31 GMT

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக கன்னோலி மற்றும் டிராவிஸ் ஹெட் களம் இறங்கினர். இந்த ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முகமது ஷமி தவறவிட்டார். மறுபுறம் கன்னோலி டக் அவுட் ஆனார். தொடர்ந்து ரன் அவுட் வாய்ப்பில் இருந்தும் தப்பித்த டிராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதிரடியாக ஆடிய ஹெட்டை வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார். ஹெட் 39 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் மற்றும் லபுஸ்சாக்னே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் லபுஸ்சாக்னே 29 ரன்னிலும், அடுத்து வந்த இங்கிலிஸ் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். இருவரது விக்கெட்டையும் ஜடேஜா வீழ்த்தினார்.

தொடர்ந்து ஸ்மித்துடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் அடித்த நிலையில் 73 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் கண்ட மேக்ஸ்வெல் 7 ரன்னிலும், துவார்ஷுயஸ் 19 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 61 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட உள்ளது. 

2025-03-04 12:24 GMT

அலெக்ஸ் கேரி 61 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

2025-03-04 12:05 GMT

45 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 239/ 6

2025-03-04 11:54 GMT

அரைசதம் கடந்தார் அலெக்ஸ் கேரி

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி 48 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

2025-03-04 11:45 GMT

40 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 213/ 6

2025-03-04 11:38 GMT

7 ரன்களில் அவுட் ஆன அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் 

2025-03-04 11:34 GMT

5வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா

நிலைத்து நின்று ஆடிய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை (73 ரன்) கிளீன் போல்டாக்கினார் முகமது ஷமி. 

2025-03-04 11:20 GMT

35 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 186/ 4

2025-03-04 11:10 GMT

நிலைத்து நின்று ஆடி வரும் ஸ்டீவ் ஸ்மித்

2025-03-04 11:02 GMT

30 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 158/ 4

Tags:    

மேலும் செய்திகள்