ரசிகர்கள் இன்றி காணப்படும் பாகிஸ்தான் மைதானம்
2 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 6/0
பாகிஸ்தானை ‘மிஸ் செய்யும்’ ரசிகர்கள்
மீண்டும் களம் கண்ட தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா
இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக எய்டன் மார்க்ரம் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
நியூசிலாந்து பிளேயிங் லெவன்
வில் யங், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், வில்லியம் ஓ ரூர்க்.
தென் ஆப்பிரிக்கா பிளேயிங் லெவன்
ரியான் ரிக்கெல்டன், டெம்பா பவுமா (கேப்டன்), ராஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம், ஹென்றிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், வியான் முல்டர், மார்கோ ஜான்சென், கேசவ் மஹராஜ், காகிசோ ரபாடா, லுங்கி என்கிடி.
டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு:
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. துபாயில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
பரபரப்பாக நடந்த அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் நடக்கும் 2-வது அரையிறுதியில் முன்னாள் சாம்பியன்களான நியூசிலாந்தும், தென் ஆப்பிரிக்காவும் மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.