நான் ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகர்... சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்த.. - டி.கே.சிவக்குமார்

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக வெங்கடேஷ் பிரசாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

Update:2025-12-08 14:22 IST

image courtesy:PTI

கப்பன் பூங்கா,

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடந்தது. இதில் புதிய தலைவராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூத்த விளையாட்டு நிர்வாக அதிகாரி ஷந்த் குமாரை 749-558 என்ற ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்த தேர்தலில் அந்த சங்க உறுப்பினராக உள்ள துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் வாக்களித்தார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், “கர்நாடக கிரிக்கெட் சங்க தேர்தலில் நான் வாக்களித்தேன். இந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இத்தகைய சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுப்போம்.

ஐ.பி.எல். போட்டிகள் அல்லது பிற சர்வதேச போட்டிகள் இங்கிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்ல நாங்கள் விடமாட்டோம். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் இங்கேயே நடத்த நடவடிக்கை எடுப்போம். எல்லா போட்டிகளையும் இங்கேயே நடத்துவோம். இது கர்நாடகம், பெங்களூருவின் கவுரவ பிரச்சினை. இதை நாங்கள் காப்பாற்றுவோம். நான் ஒரு தீவிரமான கிரிக்கெட் ரசிகர். கிரிக்கெட் சங்க உறுப்பினராகவும் உள்ளேன். அதன் அடிப்படையில் நான் வாக்களித்தேன்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்