சாம்பியன்ஸ் டிராபி: லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன..?

நடப்பு சாம்பியன்ஸ் டிராபியின் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.;

Update:2025-03-03 06:28 IST

image courtesy:twitter/@ICC

துபாய்,

8 அணிகள் பங்கேற்றுள்ள 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றிருந்த அணிகள் 2 பிரிவுகளாக (ஏ மற்றும் பி) பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன.

இதன் முடிவில் இரு பிரிவுகளிலும் புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து காணலாம்..!

ஏ பிரிவு:

இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்த ஏ பிரிவில் தனது 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. நியூசிலாந்து 2-வது இடத்தையும் (2 வெற்றி, ஒரு தோல்வி), வங்காளதேசம் 3-வது இடத்தையும், பாகிஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்தன.

ஏ பிரிவு புள்ளி பட்டியல்:

1. இந்தியா - 6 புள்ளிகள்

2. நியூசிலாந்து - 4 புள்ளிகள்

3. வங்காளதேசம் - 1 புள்ளி

4. பாகிஸ்தான் - 1 புள்ளி

பி பிரிவு:

தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம் பெற்றிருந்த பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தை ( 2 வெற்றிகள், மழையால் ரத்தான ஒரு ஆட்டம்) பிடித்தது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தையும் (ஒரு வெற்றி, மழையால் 2 ஆட்டங்கள் ரத்து), ஆப்கானிஸ்தான் 3-வது இடத்தையும் (ஒரு வெற்றி, ஒரு தோல்வி, மழையால் ஒரு ஆட்டம் ரத்து) பிடித்தன. ஒரு வெற்றி கூட பெறாத இங்கிலாந்து கடைசி இடத்தை பிடித்தது.

பி பிரிவு புள்ளி பட்டியல்:

1. தென் ஆப்பிரிக்கா - 5 புள்ளிகள்

2. ஆஸ்திரேலியா - 4 புள்ளிகள்

3. ஆப்கானிஸ்தான் - 3 புள்ளிகள்

4. இங்கிலாந்து - 0 புள்ளி


Tags:    

மேலும் செய்திகள்