கான்வே இரட்டை சதம்: 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்த நியூசிலாந்து

பொறுப்புடன் விளையாடி கான்வே இரட்டை சதமடித்து அசத்தினார்;

Update:2025-12-19 10:45 IST

மவுன்ட் மாங்கானு,

நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டாம் லாதம், டிவான் கான்வே களம் புகுந்தனர். இருவரும் தொடக்கம் முதலே நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் ஆடி வலுவான அடித்தளம் அமைத்தனர். அபாரமாக ஆடிய டிவான் கான்வே 147 பந்துகளில் தனது 6-வது சதத்தை எட்டினார்.

மறுமுனையில் டாம் லாதம் 183 பந்துகளில் தனது 15-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியை கட்டுப்படுத்த முடியாமல் வெஸ்ட்இண்டீஸ் பவுலர்கள் திண்டாடினர்.

86.4 ஓவர்களில் ஸ்கோர் 323 ரன்களாக உயர்ந்த போது தொடக்க ேஜாடி பிரிந்தது. லாதம் 137 ரன்னில் (246 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) ேகட்ச் ஆனார். டெஸ்டில் தொடக்க விக்கெட்டுக்கு நியூசிலாந்து இணையின் 2-வது அதிகபட்ச ஸ்ேகார் (323 ரன்) இதுவாகும். 1972-ம் ஆண்டு ஜார்ஜ்டவுனில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் நியூசிலாந்தின் கிளென் டர்னர்-டெர்ரி ஜார்விஸ் ஜோடி 387 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக தொடருகிறது.

ஆட்ட நேரம் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்துள்ளது. கான்வே 178 ரன்களுடனும் (279 பந்து, 25 பவுண்டரி), ஜேக்கப் டப்பி 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர் . இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நியூசிலாந்து அணி வீரர்கள் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர்.அந்த அணியில் கான்வே, ரச்சின் ரவீந்திரா இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் விளையாடி கான்வே இரட்டை சதமடித்து அசத்தினார். ரச்சின் ரவீந்திரா அரைசதமடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார். கான்வே 227 ரன்களில் வெளியேறினார். இறுதியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 575 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்