ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெய்ஸ்வால்.. என்ன நடந்தது..?

புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஜெய்ஸ்வால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.;

Update:2025-12-18 18:40 IST

புனே,

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டிகளில் நிலையான இடத்தை பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் போராடி வருகிறார். அண்மையில் முடிவடைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து அசத்தினார்.

அந்த தொடர் முடிந்த கையோடு இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கினார். அந்த வாய்ப்பிலும் சிறப்பாக செயல்பட்டார்.

இந்த தொடரில் கடந்த 16-ம் தேதி நடந்த போட்டியில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியின்போது ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு கடுமையான வயிற்று பிடிப்பு மற்றும் வலியால் அவதிப்பட்டார்.

இதனையடுத்து அவர் உடனடியாக புனேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெய்ஸ்வாலுக்கு தீவிரமான இரைப்பை குடல் அழற்சி இருப்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் அவர் சொந்த ஊரான மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், அவர் சுமார் 2 கிலோ எடை குறைந்துள்ளதகாவும், மேலும் 10 நாட்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்