தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வேட்டி - சட்டையுடன் கலக்கும் சிஎஸ்கே வீரர்கள்.. வைரல்
தோனி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் வேட்டி-சட்டையுடன் இருக்கிறார்கள்.;
image courtesy:twitter/@ChennaiIPL
சென்னை,
தமிழ் புத்தாண்டு தினம் இன்று சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி-சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
தோனி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் வேட்டி-சட்டையுடன் இருக்கிறார்கள். மேலும் அதில், " சவால்களை முறியடித்து ஒற்றுமையுடன் ஒன்றிணைவதற்கு புத்தாண்டு பலம் தரட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.