இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: அந்த இந்திய வீரர் விளையாடாதது ஆச்சரியமாக உள்ளது - மாண்டி பனேசர்

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.;

Update:2025-07-19 15:58 IST

image courtesy:BCCI

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

எஞ்சியுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே இங்கிலாந்து தொடரை கைப்பற்றி விடும் என்பதால் அந்த 2 போட்டிகளும் இந்தியாவுக்கு வாழ்வா -சாவா? போன்றதுதான்.

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் விளையாடாதது தமக்கு ஆச்சரியம் அளிப்பதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "அர்ஷ்தீப் சிங் விளையாட வேண்டும். முதல் போட்டியிலிருந்தே அவர் விளையாடாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் நல்ல கோணங்களில் பந்து வீசுவார். இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த இங்கிலாந்து நிலைமைகளில் அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருப்பார்" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்