முதல் டிவிசன் கிரிக்கெட்: 10 விக்கெட் வீழ்த்தி சந்திரசேகர் சாதனை

இதனால் டிரோட்டர்ஸ் அணி 2-வது இன்னிங்சில் 91 ரன்னில் சுருண்டது.;

Update:2025-07-30 05:07 IST

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் நடந்து வரும் முதல் டிவிசன் லீக் கிரிக்கெட்டில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் டி.டி.சந்திரசேகர் இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். குளோப் டிரோட்டர்சுக்கு எதிரான ஆட்டத்தில் சீ ஹாக்ஸ் அணிக்காக களம் இறங்கிய சந்திரசேகர் 2-வது இன்னிங்சில் இடைவிடாது 15 ஓவர்கள் பந்து வீசி 5 மெய்டனுடன் 37 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் அள்ளினார். இதனால் டிரோட்டர்ஸ் அணி 2-வது இன்னிங்சில் 91 ரன்னில் சுருண்டது. அதன் மூலம் சியா ஹாக்ஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

முதல் டிவிசன் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு 1991-92-ம் ஆண்டில் தெற்கு ரெயில்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் வெங்கட்ரமணா (இந்தியன் வங்கி அணி) 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார்

Tags:    

மேலும் செய்திகள்