ஆஸி.க்கு எதிரான முதல் டி20: இந்தியாவின் பிளேயிங் லெவனை கணித்த முன்னாள் வீரர்
ஆஸ்திரேலியா - இந்தியா முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.;
image courtesy:BCCI
மும்பை,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நாளை (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரரான பார்த்தீவ் படேல் கணித்துள்ளார். அவரது அணியில் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்திக்கு இடமளித்துள்ளார்.
பார்த்தீவ் படேல் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன்:
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ஷிவம் துபே, நிதிஷ் ரெட்டி ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி.