முதல் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது.;

Update:2025-11-14 09:11 IST

கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது. 

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:

இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

தென் ஆப்பிரிக்கா: மார்க்ராம், ரியான் ரிக்கல்டன், வியான் முல்டர், டெம்பா பவுமா(கேப்டன்), டோனி டி சோர்ஜி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெர்ரேய்ன், சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், கேசவ் மகராஜ்

Tags:    

மேலும் செய்திகள்