கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றியோடு முடிக்க விரும்பினேன்: நியூசிலாந்து கேப்டன்
ஷோபி டிவைனின் கடைசி போட்டி தோல்வியில் முடிந்தது.;
விசாகப்பட்டினம்,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று விசாகப்பட்டினத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய 27-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 38.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் லின்சே ஸ்மித் 3 விக்கெட்டுகளும், நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் அலைஸ் கேப்சி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்துவிளையாடியது. தொடக்கம் முதல் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் அதிரடி காட்டினர். இறுதியில் 29.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து அணி கேப்டன் ஷோபி டிவைன் அறிவித்திருந்தார். அரையிறுதிக்கு முன்னேறாததால் நியூசிலாந்து அணி தொடரிலிருந்துக்கு வெளியேறியது . இதனால் ஷோபி டிவைனின் கடைசி போட்டி தோல்வியில் முடிந்தது.
இது தொடர்பாக ஷோபி டிவனின் கூறியதாவது ,
ஏமாற்றம் அளிக்கிறது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை உயர்ந்த இன்னிங்ஸ் மற்றும் வெற்றியுடன் முடிக்க விரும்பினேன். இங்கிலாந்து அணிக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
159 ஒருநாள் போட்டிகளில் 9 சதம், 18 அரைசதங்களுடன் 4279 ரன்கள் அடித்துள்ளார். 146 டி20 போட்டிகளில் 1 சதம், 21 அரைசதங்களுடன் 3,431 ரன்கள் அடித்துள்ளார்.ஒருநாள் போட்டிகளில் 111 விக்கெட்டுகளும், டி20-யில் 119 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.