ரோகித் சர்மாவிடம் கற்றுக்கொண்டதை நினைவில் வைத்திருப்பேன்: சுப்மன் கில்

இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா அறிவித்துள்ளார்;

Update:2025-05-08 22:13 IST

புதுடெல்லி,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் மூத்த வீரர் ரோகித் சர்மா அறிவித்துள்ளார். ஏற்கனவே சர்வேதேச டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுள்ள ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது,

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் நீங்கள் செய்த சாதனைகளுக்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது. எனக்கும் மற்றும் எல்லோருக்கும் நீங்கள் உத்வேகமாக இருந்தீர்கள். உங்களுடன் விளையாடிய மற்றும் உங்களுக்கு எதிராக விளையாடிய அனைவருக்கும் உத்வேகமாக இருந்தீர்கள். உங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட விசயங்களை எப்போதும் ஞாபத்தில் வைத்திருப்பேன்..இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்