டிம் டேவிட்டுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி. - காரணம் என்ன..?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது.;

Update:2025-08-05 15:16 IST

கோப்புப்படம்

துபாய்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இந்த தொடரை 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முழுமையாக கைப்பற்றியது. இந்த தொடரின் 5வது போட்டி கடந்த ஜுலை 28ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், இந்த போட்டியில் ஐ.சி.சி. நடத்தை விதிமுறைகளை மீறியதாக கூறி ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டிம் டேவிட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் ஐ.சி.சி. அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டியின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பான வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான ஐ.சி.சி நடத்தை விதிகளின் பிரிவு 2.8 ஐ டேவிட் மீறியதாகக் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அபராதம் மற்றும் தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்