எதிர்காலத்தில் பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டி இருக்கும் - அஸ்வின்

எதிர்காலத்தில் பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டி இருக்கும் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-24 04:22 GMT

சென்னை,

இறுதி கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று (குவாலிபயர் 2) ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

முந்தைய ஆட்டத்தின் ஹீரோவான ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இது சொந்த ஊர் மைதானம் என்பதால் அவரது பந்து வீச்சு ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளது.

இந்த போட்டிக்கு முன்னதாக அஸ்வின் அளித்த பேட்டியில், 'ஐ.பி.எல். தொடரில் இம்பேக்ட் வீரர் விதிமுறை இல்லாவிட்டாலும் அதிக ரன் குவிக்கப்படும். என்னை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று கூறுவேன். ஆடுகளங்களும் தரமாக உள்ளன. எதிர்காலத்தில் பந்து வீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களாக மாற வேண்டி இருக்கும். நன்றாக பந்து வீசினாலும் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியமாகும். ஆட்டங்கள் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றன' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்