யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.;

Update:2026-01-25 00:04 IST

ஹராரே,

16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற 24வது லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா  பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து 36.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சாம்சன் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அமிரிஷ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி 13.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்