மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி

டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.;

Update:2026-01-24 22:56 IST

காந்தி நகர்,

5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்ற 15வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் நந்தினி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றிபெற்றது. டெல்லி அணியின் லோரா வால்வெர்ட் அதிகபட்சமாக 42 ரன்கள் குவித்தார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூரு ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்