ஆண்டர்சன் - தெண்டுல்கர் கோப்பை: அதிக ரன், விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 வீரர்கள்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.;

Update:2025-08-05 07:41 IST

image courtesy:ICC

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து இடையே 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது. இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இந்த தொடரின் முடிவை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 85.1 ஓவர்களில் 367 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்த தொடரில் இரு அணியை சேர்ந்த பல வீரர்களும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றிக்காக போராடினர். ரிஷப் பண்ட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் காயத்தை பொருட்படுத்தாமல் அணிக்காக பேட்டிங் செய்தனர். இப்படி ஏராளமான நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் அதிக ரன்கள், விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 5 வீரர்கள் குறித்து இங்கு காணலாம்..!

அதிக ரன் குவித்த டாப் 5 வீரர்கள்:-

1. சுப்மன் கில் - 754 ரன்கள்

2. ஜோ ரூட் - 537 ரன்கள்

3. கே.எல்.ராகுல் - 532 ரன்கள்

4. ஜடேஜா - 516 ரன்கள்

5. ஹாரி புரூக் - 481 ரன்கள்

அதிக விக்கெட் வீழ்த்திய டாப் -5 வீரர்கள்:

1. முகமது சிராஜ் - 23 விக்கெட்டுகள்

2. ஜோஷ் டாங் - 19 விக்கெட்டுகள்

3. ஸ்டோக்ஸ் - 17 விக்கெட்டுகள்

4. பும்ரா/பிரசித் கிருஷ்ணா - 14 விக்கெட்டுகள்

5. ஆகாஷ் தீப் - 13 விக்கெட்டுகள்

Tags:    

மேலும் செய்திகள்