இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கு அரசுப்பணி... வெளியான தகவல்
விளையாட்டுத் துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது.;
image courtesy:PTI
லக்னோ,
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரிங்கு சிங் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். இந்திய அணியின் சிறந்த பினிஷராக செயல்பட்டு வருகிறார். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணியில் அசத்தியதன் மூலம் இந்தியாவுக்கு அறிமுகம் ஆனார். இந்திய அணியிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வருகிறார்.
இந்நிலையில் விளையாட்டு துறையில் நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அவருக்கு உத்தரபிரதேச அரசின் மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டு துறையில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களை அங்கீகரிக்கும் உத்தரபிரதேச அரசின் திட்டத்தில் அவருக்கு இந்த பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.