இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை
தற்போது நலமுடன் இருப்பதாக சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.;
image courtesy:PTI
பெங்களூரு,
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. சமீப காலமாக அடிவயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக குடலிறக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
தற்போது இந்தியாவுக்கு திரும்பியுள்ள அவர் நலமுடன் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் களத்திற்கு திரும்ப காத்திருக்க முடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "கீழ் வயிற்றில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குணமடையும் பாதையில் இருக்கிறேன். திரும்பி வர காத்திருக்க முடியவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.